கொரியா நாட்டின் சாங்வான் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் 2022 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பார்த்மகிஜா, அர்ஜுன் பபுடா, டுஷர்மேன் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்த ஆடவர் குழு 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளனர். இந்தத் தொடரில் இந்தியா வெல்லும் மூன்றாவது தங்கம் இதுவாகும். அதேபோல, இந்தியாவின் இளவேனில் வளரிவன், மேகுளி கோஷ், ரமிதா, உள்ளிட்டோர் ஒருங்கிணைந்த மகளிர் குழு 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். மேலும், இந்திய வீரர்கள் பிரித்விராஜ் தொண்டைமான், பௌனீஸ் மெண்டிரட்டா, விவான் கபூர் உள்ளிட்டோர் குழு வெள்ளி வென்று அசத்தியுள்ளனர். இதில் பிரித்விராஜ் தொண்டைமான் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.