உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் நேற்று திடீரென முடங்கியது. இதனால், பயனர்கள் ட்விட்டரில் ட்வீட் செய்வதிலும், மற்றவர்கள் ட்வீட்களை பார்ப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சில நிமிடங்கள் மட்டுமே செயலிழந்து இந்த சிக்கல் ஏற்பட்டாலும் இதுதொடர்பாக அமெரிக்காவில் மட்டும் சுமார் 50 ஆயிரம் ட்விட்டர் பயனாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பின்னர், சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏதும் இல்லாமல் வழக்கம்போல செயல்படத் தொடங்கியது.