சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று 12ஆம் வகுப்பு தேர்வெழுதியவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். முன்னதாக சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக ஒரு மாத காலம் ஆகலாம் என்று யுஜிசி தெரிவித்திருந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பேசிய அமைச்சர், சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்படும் தாமதத்தால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் தாமதமாகிறது. இது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.