இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 20 ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 076 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இதுவரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 557 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 482 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவில் இருந்துமீண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 28 ஆயிரத்து 356 ஆக உயர்ந்துள்ளது.