பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க 12ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்ற மாணவியர்கள் கல்லூரிகளில் சேர்வது முதல், படிப்பு முடியும் இறுதியாண்டு வரை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக மாதம் ரூ.1,000 செலுத்தும் திட்டம் தமிழக அரசால் இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, இந்த திட்டத்துக்கு மாணவிகள் விண்ணப்பிக்க கடந்த மாதம் அறிவிக்கப்பட்டு ஜூன் 30ஆம் தேதி அதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜூலை 10ஆம் தேதி அதாவது நேற்று வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மூவலூர் ராமமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு உறுதித் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 பெற தமிழகம் முழுவதும் 3,58,304 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.