டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி, அதில் சில மாற்றங்களை கொண்டுவரவும் பொதுமக்களிடம் அவரும் டுவிட்டரில் கருத்துகளை கேட்டிருந்தார். இந்த நிலையில், டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். போலி கணக்குகள் குறித்த தகவல்கள் கொடுக்கப்படாததை அடுத்து 44 பில்லியன் டாலர் கொடுத்து டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் கைவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மஸ்க் இந்த முடிவுக்கு அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக டுவிட்டர் தலைவர் பிரட் டெய்லோ தெரிவித்துள்ளார்.