கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் மக்கள் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதையடுத்து, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியதை அடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக்கோரி கடந்த சில மாதங்களாகவே அந்த நாட்டின் எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக இன்று மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டபோது காவலர்கள் தண்ணீரை பீச்சியடித்து அவர்களை விரட்ட முயற்சி செய்தனர். எனினும், அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். இதனிடையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச மாளிகையில் இருந்து தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போராட்டக்காரர்கள் இலங்கை அதிபர் ரஜிதா சேனரத்னாவை கடுமையாக தாக்கியதாகவும், தகவல் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இத்துடன் கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசி வருவதாகவும், போராட்டக்காரர்களில் ஒரு சிலர் உயிரிழந்துள்ளதாகவும், படுகாயமைடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பல தகவல்கள் இலங்கையில் இருந்து வெளிவந்துகொண்டு இருக்கிறது.