தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் (DEE) சேர https://scert.tnschools.gov.in இணையதளத்தில் ஜூலை 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல, தமிழகத்தில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டுக்கான பகுதி நேர பொறியியல் பட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர விரும்புவோர் இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் நிறுவனத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.