இங்கிலாந்து நாட்டின் லண்டன் டென்னிஸ் மைதானத்தில் உள்ள சென்டர் கோர்ட்டின் நூற்றாண்டு விழாவில், சிறப்பு விருந்தினராக ரோஜர் பெடரர் கலந்து கொண்டார். இந்த நிலையில், பெடரர் வருகை தரும் புகைப்படத்தை, “வாத்தி கம்மிங்” என்ற விஜயின் மாஸ்டர் பட பாடல் வரியை குறிப்பிட்டு, விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில், அனிருத் இசையில் உருவான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற, வாத்தி கம்மிங் பாடல், சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளதை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி பகிர்ந்து வருகின்றனர்.