சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இதன்மூலம், ரூ.1.25 லட்சம் கோடி முதலீடுகள் மூலம் சுமார் 74,898 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுவதாகவும் தொழில்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில், 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியதுடன், 12 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.