சமீப காலமாகவே வாட்ஸ் அப் செயலி பயனர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பல்வேறு அப்டேட்களை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில், வாட்ஸ் அப் செயலி பயனர்கள் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை இரண்டரை நாட்கள் ‘டெலிட் பார் எவ்விரி ஒன்’ (delete for everyone) என்ற வசதியை பயன்படுத்தி இருபக்கமும் நிரந்தரமாக அழித்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, நடைமுறையில் உள்ள அழிக்க கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் என்ற அவகாசத்தை நீட்டித்து அப்டேட் வெளியாகவுள்ள நிலையில், அதேபோல், அழிக்கப்பட்ட தகவல்களை, மீண்டும் திரும்பப் பெறும் வசதியினையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம், வாட்ஸ் அப் பயனர்கள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவுள்ளதால் உற்சாகத்தில் உள்ளனர்.