நடிகைகள் தங்களின் புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் பகிர்வது வழக்கம். ஆனால், அந்த பதிவுகளுக்கு கிடைக்கும் கமெண்ட்களுக்கு பதிலளிப்பது மிக சிலரே. அந்தவரிசையில், தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுகமாகி தொடர்ந்து, விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர், தனுஷ் உடன் இணைந்து மாறன் படங்களிலும் நடித்தவர் மாளவிகா மோகனனும் ஒருவர். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றுக்கு ரசிகர் ஒருவர், ”தயவு செய்து போக்குவரத்து நெரிசல் மிகுதி காரணமாக மக்கள் அதிகம் சாலையில் இருக்கும்போது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடாதீர்கள். உங்களின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே சென்னையில் பள்ளமாக இருக்கும் சாலை ஒன்றில் விழுந்திருப்பேன்” என்று பதிவிட்டிருந்தார். அந்த கமெண்டை மிகவும் பாசிடீவ் ஆக எடுத்துக்கொண்ட மாளவிகா நான் இதை பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.