இந்தியாவில் எரிவாயு சிலிண்டருக்கான விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே மாற்றி அமைத்துக்கொள்ளலாம். அதன்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் வணிக பயண்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று குறைத்துள்ளது. அதில், சென்னையில் 19 கிலோ எடைக் கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.187 குறைந்து ரூ.2,186க்கு விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், 14.2 கிலோ கிராம் எடைக்கொண்ட சிலிண்டர் விலை ரூ.1018.50 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது.