ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹேமில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனையை நிகழ்த்தி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். முன்னதாக கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் என்ற தடகள வீரர் 90.31 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஏற்கனவே நீரஜ் சோப்ரா பின்லாந்து நாட்டில் நடைப்பெற்ற நூர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீட்டம் தூரம் ஈட்டி எறிந்ததே சாதனையாக இருந்த நிலையில், அவரது முந்தைய சாதனையை அவரே தற்போது முறியடித்துள்ளார்.