திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 29) திறந்து வைத்துள்ளார். இந்த ஆட்சியர் அலுவலகத்தில் 200 பேர் அமரும் வகையில் பெரிய கூட்டரங்கம், 300 இருக்கைகள் கொண்ட குறை தீர்வுக் கூட்ட அரங்கம், 3 சிறிய கூட்டரங்கங்கள், நீரூற்றுடன் கூடிய பூங்கா, மழைநீர் வடிகால் வசதிகளும் உள்ளன.