தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் இருந்து நெல்லையில் உள்ள தனியார் பள்ளிக்கு தினந்தோறும் ஆட்டோவில் பள்ளி மாணவர்கள் சென்று வருவது வழக்கம். அந்தவகையில், இன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டு கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியதால் அனவரதநல்லூரில் சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் செல்வ நவீன் என்ற நான்கரை வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஆட்டோவில் சென்ற 7 மாணவ-மாணவிகள் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய ஓட்டுநரை காவலர்கள் தேடிவருகின்றனர்.