புனேவைச் சேர்ந்த பிரீத்தி மாஸ்கே என்ற 2 குழந்தைகளுக்கு தாயான 45 வயதான பெண் சைக்கிளில் எல்லைச் சாலை அமைப்புடன் இணைந்து லடாக்கின் லேவில் இருந்து மணாலி வரை 480 கிலோ மீட்டர் தூரத்தை 55 மணி நேரம் 13 நிமிடங்களில் தனி ஆளாக கடந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 8 ஆயிரம் மீட்டர் உயர சாலையை கடந்து பிரீத்தி படைத்த சாதனையை அங்கீரிக்கும் பணியில் கின்னஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.