நாட்டின் 15 வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்புமனுதாக்கல் செய்துள்ளார். அவரை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்புமனுதாக்கல் செய்தார்.