தமிழகம் முழுவதும் நேற்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைப்பெற்றது. இதில், சென்னை உயர் நீதிமன்றத்தில் 7 அமர்வுகளும், மதுரைக் கிளையில் 3 அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகாக்களில் 433 அமர்வுகளும் வழக்குகளை விசாரித்தன. காசோலை மோசடி, வாகன விபத்து, தொழிலாளர் மற்றும் குடும்ப பிரச்சினைகள், சிவில் வழக்குகள் உள்பட ரூ.465 கோடி மதிப்பிலான 83 ஆயிரத்து 196 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டதாக மாநில சட்டப் பணிகள் ஆணையக் குழு தெரிவித்துள்ளது.