பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெகுவிமர்சையாக திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் ஆலியா பட் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், தன்னுடைய கருவில் உள்ள குழந்தையை ஸ்கேன் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும், பதிவில் ’எங்கள் குழந்தை விரைவில் வரவுள்ளது’ என தான் கருவுற்று இருப்பதையும் விரைவில் பெற்றோராக இருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெற்றோர் ஆகப் போகும் ரன்பீர் கபூர்-ஆலியா பட் தம்பதிக்கு அவர்களது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.