இந்திய ராணுவத்தில் அக்னிபாத் எனப்படும் அக்னிபாதைத் திட்டத்தின் கீழ் பாதுகாப்புப் படையில் 4 ஆண்டுகள் பணியாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ், விமானப்படையில் சேர ஜூலை 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், ஜூலை 24ஆம் தேதி தொடங்கிய இந்த விண்ணப்பம் பதிவேற்றும் பணியில் கடந்த மூன்று தினங்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்துக்கு எதிராக பல எதிர்ப்பு குரல்களும், போராட்டங்களும் இன்றுவரை நடைப்பெற்று வரும் நிலையில், பல்லாயிரகணக்கானோர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.