ஜூலை 1ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக கைவிடப்பட்ட ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இந்தநிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக பும்ரா தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருந்த அஸ்வினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், அஸ்வின் இங்கிலாந்துக்கு செல்லாமல் இந்தியாவிலேயே தன்னை தற்போது தனிமைபடுத்திக்கொண்டார்.