உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 1983ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. 1975 மற்றும் 1979 உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு இந்த போட்டியில் பங்கேற்ற கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு இதே நாளில் முதன்முதலில் கோப்பையை கைப்பற்றியது. இதனை கொண்டாடும் விதமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோப்பையுடன் இருக்கும் கபில் தேவ்வின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.