தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளி மெட்ரிக் மாணவர்களின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகளை நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 20ஆம் தேதி வெளியிட்டார். இதனையடுத்து, பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 24ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுமென்றும், தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தேர்வெழுதிய மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு நாளை (ஜூன் 22ஆம் தேதி) முதல் வரும் 29ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதனபடி, இன்று காலை 11 மணி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முன்னதாக 12ஆம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற மாணவர்கள் இளங்களை படிப்புகளில் அரசு கலை கல்லூரிகளில் சேர ஜூன் 22 விண்ணப்பங்கள் ஆன்லைனில் கிடைக்கத் தொடங்கியுள்ளது. www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதளத்தில் ஜூலை 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதேபோல, B.E., B.Tech., படிப்புகளில் சேர கடந்த 21 தேதி முதல் விண்ணப்பங்கள் https://tneaonline.org/ என்ற இணையதளத்தில் கிடைக்கின்றன. இதற்கு ஜூலை மாதம் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.