தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் ஆறாவது சீசன் இன்று திருநெல்வேலியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இதுவரை 5 சீசனில் 3 முறை வெற்றி பெற்றுள்ள நடப்பு சாம்பியன் சேப்பாக்கம் அணியை நெல்லை அணி எதிர்கொள்கிறது. தமிழகத்தின் திருநெல்வேலி, திண்டுக்கல், கோவை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் இந்த சீசன் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.1 கோடி பரிசும், கோப்பையும் வழங்கப்படும்.