இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு இலங்கைக்கு எதிராக மூன்று டி-20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணியின் புதிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி தம்புலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இன்று பங்கேற்கிறது. இது சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.சி.சி., உலக கோப்பை 50 ஓவர் தொடருக்கு பின், இந்த அணி பங்கேற்றும் முதல் சர்வதேசத் தொடராகும்.