வேலூர் மாவட்டம், வேலூர் பள்ள இடையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (13) அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், இன்று தனது தாயுடன் சென்று அகத்தி கீரையை உடைத்து கட்டுகட்டி சைக்கிளில் வைத்து தள்ளிக்கொண்டு வந்துள்ளார். அப்போது, அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்த மாணவர் தினேஷ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பாகாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவர் தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உதவிக்காக சென்ற பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி தாயின் கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.