வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் செல்வி (56). வேலப்பாடியை சேர்ந்த இவர் இன்று வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளார். எப்போதும் போல பணியில் இருந்தபோதே திடீரென மயங்கி விழுந்துள்ளார். செல்வியை பரிசோதிக்க உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பார்த்தபோது ஏற்கனவே அவர் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. பின்னர் செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளியான செல்வி கடந்த 25 ஆண்டுகளாக ஆட்டோ மூலம் அலுவலகத்திற்கு வந்து பணி செய்துள்ளார். பணியின்போது அலுவலக உதவியாளர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.