திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணைக்கு, கடந்த சில மாதங்களாக தமிழக-ஆந்திரா எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில எல்லை பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தடுப்பணையில் குளிக்க குவிந்தனர். இதில், இளைஞர்கள் சுமார் 12 அடி ஆழமுள்ள தடுப்பணை தண்ணீரில் குதித்து ஆபத்தை உணராமல் விளையாடி வருகின்றனர். பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளின் உயிரை சற்றும் பொருட்படுத்தாமல் நீரில் மூழ்கடித்து விபரீத விளையாட்டு விளையாடியது பார்போர்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.