திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் விவசாயி செந்தில் என்பவரது வீட்டில் இன்று காலை ஆந்தை ஒன்று பறந்து வந்து விழுந்துள்ளது. அதை பார்த்த விவசாயி செந்தில், அதுவரை தான் பார்த்திராத வகையில் இருக்கும் அந்த ஆந்தையை மீட்டு, பழவேற்காடு வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்து ஆந்தையை ஆய்வு செய்த வனத்துறையினர், இந்த வகை ஆந்தைகள் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் வாழும் அரிய வகை பார்ன் வகை ஆந்தைகள் என்று கூறியுள்ளனர். பின்னர், வனத்துறையினர் ஆந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வண்டலூர் பறவைகள் சரணாலயத்தில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்கிடையில் விவசாயி வீட்டில் பிடிபட்ட அரிய வகை வெளிநாட்டு ஆந்தையை அந்த பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.