இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, 12 ஆயிரத்து 847ஆக உள்ளது. இதனையடுத்து, இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, 4 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரம் வரை இந்தியா முழுவதும் 63 ஆயிரத்து 063 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 7 ஆயிரத்து 985 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனைத்தொடர்ந்து, இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 82 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 14 பேர் இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 195.84 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15 லட்சத்து 27 ஆயிரத்து 365 பேருக்கு கொரோனா நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.