உத்தரப்பிரேதச மாநிலம் புகழ்ப்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலின் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புற சுவரில் இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாகவும், அவற்றுக்கு தினமும் பூஜைகள் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனவும் 5 பெண்கள் வாரணசியில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தொடர்பான வழக்குகள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முன்னதாக வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஜூலை 4ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஞானவாபி வழக்கு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அதில், நபிகள் நாயகம் குறித்து அவமதிக்கும் வகையிலான கருத்துகளை பகிர்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கருத்துக்கு டெல்லி பாஜக கட்சியின் ஊடக பொறுப்பாளர் நவீன் ஜிந்தால் ஆதரவளித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, இந்த இரு பாஜக கட்சியினர் கருத்துக்கும் எதிர்ப்புகள் வலுத்தது. இதைத்தொடர்ந்து, மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக நுபுர் சர்மா மீது மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து, நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிந்தாலை பாஜக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியது. எனினும், பாஜக கட்சி சார்ந்தவர்களின் இந்த சச்சைக்குறிய கருத்தால் அரபு நாடுகள் கொதித்தெழுந்தன. சர்ச்சைக்குறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும் மற்றும் அவர்களுக்கு தக்க தண்டனையும் வைக்க வேண்டும் என ஒன்றன்பின் ஒன்றாக கத்தார், குவைத் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை வைத்த நிலையில் பாகிஸ்தானும் தற்போது இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பாஜக தலைவர்களின் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்ததுடன் உலக நாடுகள் இந்தியாவை கடுமையாக கண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்ததால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதற்கு பதிலளித்துள்ளது. அதில், ”பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எதிர்க்கொண்டு வரும் துயரங்கள் குறித்து உலக நாடுகள் நன்கு அறிந்தவை. இந்தியா மீது பாகிஸ்தான் களங்கத்தை விளைவித்து இந்தியாவில் வகுப்புவாத நல்லிணக்கத்தை தூண்டுவதற்கு பதிலாக தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மீது அக்கறை செல்லுத்துமாறு கூறியுள்ளது.