தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின்படி செயல்பட்டு வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதில், 26 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுத பதிவு செய்து இருந்த நிலையில், 1,95,292 பேர் 12ஆம் வகுப்பு தேர்வையும், 2,58,641 பேர் 11ஆம் வகுப்பு தேர்வையும், 2,25,534 பேர் 10ஆம் வகுப்பு தேர்வையும் என்று மொத்தம் 6,79,467 பேர் எழுதவில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நடந்து முடிந்த 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத 6,79,467 மாணவர்களின் விவரங்களை சேகரித்து, அடுத்த மாதம் வர இருக்கும் துணைத் தேர்வில் பங்கேற்க வைக்க தேவையான அனைத்து நடவடிக்களையும் துரிதப்படுத்த அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.