ஆளும் திமுக அரசு தங்களது ஆட்சிக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிடுவோர்களின் குரல்வளையை நசுக்குவதில் மட்டும் ஆர்வம் காட்டி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இந்த அரசு மக்களை மறந்து வெகு நாட்கள் ஆகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்துடன், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த காணொலி ஒன்றை பகிர்ந்துள்ள அவர், ”வாராவாரம் இப்படிப்பட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடப்பது தான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை. திமுக நிர்வாகியிடம் இழந்த 4000 சதுரடி நிலத்தை மீட்கப் போராடும் இந்த குடும்பம் எடுத்த முடிவு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிப்பு, விளம்பரம் மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் இந்த திமுக அரசுக்கு முடிவுரையை மக்கள் விரைவில் எழுதுவார்கள் என விமர்சித்துள்ளார்.