திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காலணி தொழிற்சாலை தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பியபோது, ஆம்பூர் அடுத்த பாப்பனபள்ளி பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாணியம்பாடி, தும்பேரி, மதனாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து உமராபாத் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காவல்துறையினர் தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேசி படுகாயமடைந்த தொழிலாளர்களுக்கு உயர் தர சிகிச்சை அளிக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.