திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற அரசு பேருந்தில், தனியார் நிறுவன ஊழியர் அரி என்பவர் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை நடத்துனர் தேவன் தட்டி கேட்டதாகத் தொிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நடத்துனர் சக பயணிகள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் பேசியும், செருப்பு காலுடன் தனியார் நிறுவன ஊழியர் அரியை பலமுறை எட்டி உதைத்தும் தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயணி ஒருவரை செருப்பு காலால் எட்டி உதைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனருக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் வலுத்து வருகிறது. இதுகுறித்து கவரப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் துறைசார் நடைவடிக்கையை போக்குவரத்துத்துறை அமைச்சர் எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.