வேலூர் மாவட்டம் காட்பாடி திருவள்ளுவர் நகர் அருகே உள்ள ஆண்டாள் நகர் பகுதிக்கு வழிதவறி வந்த புள்ளிமான் ஒன்று அப்பகுதியில் அதி வேகமாக அங்கும் இங்கும் ஓடி அருகில் இருந்த சுவற்றில் மோதியதில் கால் மற்றும் தலைப்பகுதியில் காயம் அடைந்துள்ளது. இதனையடுத்து, அந்தபகுதி இளைஞர்கள் புள்ளிமானை பத்திரமாக மீட்டு வேலூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். காயத்துடன் மீட்ட புள்ளிமானை வனத்துறை அதிகாரிகள் வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். காயங்கள் குணமடைந்த பின் புள்ளிமான் பத்திரமாக காப்புக்காடு அல்லது அமிர்தி உயிரியல் பூங்காவில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.