திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நினைவு தினத்தையொட்டி, காங்கிரஸ் கட்சியினர் அன்னதானம் மற்றும் சிறிய அரிசி மூட்டைகளை வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தனர். இதனை அறிந்துகொண்ட அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் குவிந்தனர். அப்போது, அங்கு வந்த பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு அவர் அரிசி மூட்டைகளை வழங்கினார். அப்போது, அதனை பெறுவதற்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்து சென்றனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட துரை சந்திரசேகர் வெளியேற முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்குள் புகுந்து சட்டமன்ற உறுப்பினரை மீட்டு அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர். முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் கூட்டநெரிசலில் சிக்கிக்கொண்டு தவிப்பதை கூட பொருட்படுத்தாமல் அரிசி மூட்டைகளை தூக்கி செய்வதிலேயே அங்கு இருந்த பொதுமக்கள் குறியாக இருந்த சம்பவம் முக சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது.