திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு வழியாகவே அரசு பொது மருத்துவமனை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோதி நகர், புதூர் என 10க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக உள்ளது. இந்தநிலையில், சாலையின் நடு பகுதியில் கழிவுநீர் கால்வாய் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனையடுத்து, இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகனங்கள், பள்ளத்தை அடையாளம் கண்டு விபத்துக்குள்ளாவதை தடுக்க, பள்ளம் உள்ள இடத்தில் அந்த பகுதி மக்கள் தர்மாகோல் வைத்துள்ளனர். எனவே சாலையின் நடுவே உடைந்து சேதமடைந்துள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.