கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற அமைதி போராட்டத்திற்குள் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவு அணியினர் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையின்போது சிறைக் கைதிகளும் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் கைதிகளை ஏற்றிச்சென்ற பேருந்து வன்முறை நடத்த இடத்தில் மாட்டிக்கொண்டதாக சொல்லப்பட்டது. இதற்கிடையில், அந்த பேருந்தில் இருந்த கைதிகள் தப்பி விட்டதாக இலங்கை சிறைச்சாலை ஆணையர் நாயகம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், கைதிகள் 40 பேர் சிறையில் இருந்து தப்பியது உறுதியானதை அடுத்து, தப்பிய கைதிகள் படகுகள் மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவக்கூடும் என புலனாய்வு தகவல் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தின் இராமேஸ்வரம், கோடியக்கரை, தொண்டி மற்றும் நாகை மாவட்ட கரையோர பகுதிகளில் கடலோர காவல் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.