15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 57ஆவது லீக் ஆட்டத்தில், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. இன்று மாலை 7.30 மணிக்கு இந்தபோட்டி புனே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்ததொடரின் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இந்தநிலையில், இந்ததொடரில் இதுவரை 11 ஆட்டங்களில் போட்டியிட்டு உள்ள லக்னோ அணி 8 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல, குஜராத் அணியும் 11 ஆட்டங்களில் விளையாடி அதில் 8 ஆட்டத்தில் வெற்றியும், 3 ஆட்டத்தில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்கும் லக்னோ மற்றும் குஜராத் முறையே தலா 16 புள்ளிகள் பெற்று இருந்தாலும் ரன் ரேட் உள்ளிட்ட காரணிகளை கொண்டு முதல் இரண்டு தரங்களை பெற்றுள்ளது. மேலும், வலுவான நிலையில் உள்ள இரு அணிகளும் முதல் அணியாக யார் ப்ளே-ஆப் சுற்றுக்கு செல்வது என்ற முனைப்பில் உள்ளனர். முன்னதாக 2 அணிகளும் ப்ளே-ஆப் சுற்றுக்கு செல்ல முயற்சித்து தோல்வியுற்ற நிலையில் இன்றைய போட்டி யாருக்கு கைக்கொடுக்கும் என்று ஐபிஎல் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்தநிலையில், இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக ஆட்ட தரவுகளும், தற்போதைய கணிப்பும் கூறுகிறது.