தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுகளை தமிழகம் முழுவதும் உள்ள 3,081 தேர்வு மையங்களில் மொத்தம் 8,22,684 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 3,91,343 பேர் மாணவர்கள் மற்றும் 4,31,341 மாணவிகள் ஆவர். இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற இருக்கிறது. தவிர மாணவ மாணவிகள் தேர்வு அறையில் காலை 9.45 மணி முதலே இருந்து வருகின்றனர். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தமிழ் தேர்வு நடைபெற்று வருகிறது. நாளை 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்க உள்ளது.