15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 43ஆவது லீக் ஆட்டத்தில், இன்று ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை, பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எதிர்க்கொள்கிறது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்தஆட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில் 5ஆட்டத்தில் வெற்றியும், 4ஆட்டத்தில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. மேலும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை போட்டியிட்ட 8 ஆட்டங்களில் 7ஆட்டங்களில் வெற்றி பெற்று பலமான அணியாக உள்ளது. இந்தநிலையில், இந்ததொடரில் வெற்றிகரமாக விளையாடிவரும் அறிமுக அணியான குஜராத்தின் வெற்றி பயணத்தை பெங்களூரு தடுக்குமா அல்லது பெங்களூருவை வீழ்த்தி குஜராத் தன் வீறுநடையை தொடருமா என்று பார்க்க ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், இந்ததொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.