15ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் டி20 போட்டியின் 40ஆவது லீக் ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஐதராபாத் அணியை குஜராத் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. இதனால், குஜராத் அணிக்கு 196 ரன்கள் வெற்றி இலக்காக அமைந்தது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்து குஜராத் திரில் வெற்றியை பெற்றது.