காஞ்சிபுரம் மாநகராட்சி பெரிய காஞ்சிபுரம் பகுதிக்கு உட்பட்ட இறந்தவர்களுக்கு காரிய சடங்குகள் செய்யும் சர்வதீர்த்த குளக்கரை உள்ளது. இந்தஇடத்தில் பலர் ஒரே நேரத்தில் காரிய சடங்குகள் மேற்கொள்வதால் இடநெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் அவதிபட்டு வந்தனர். இந்தநிலையில் திமுக கட்சியை சேர்ந்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசனின் 2018-2019ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்ச மதிப்பீட்டில் காரிய மண்டபமானது கழிப்பறை வசதியுடன் கட்டப்பட்டு உள்ளது. இதனையடுத்து, காரிய மண்டபமானது கட்டி முடிக்கப்பட்டு மாத கணக்கிலாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமலே இருந்து வருகிறது. மேலும் திறக்கப்படாத இந்த காரிய மண்டபத்தின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த முன்பக்க நுழைவு வாயில் மதில்சுவரானது தற்போது இடிந்து விழுந்துள்ளது. கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு இன்னும் திறப்பு விழாவே செய்யப்பட்டாத நிலையில் அதன் நுழைவு வாயில் மதில்சுவர் இடிந்து விழுந்து கிடக்கும் நிலையை கண்டு பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.