இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமானது ராணி ராஷ்மோனி கப்பல். இந்தகப்பல், ஆந்திரா கடற்கரையை ஒட்டிய வங்காளவிரிகுடா கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, மீன்பிடி வலை ஒன்றில் சிக்கியிருந்த ஆலிவ் ரிட்லி வகை ஆமையைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, ஆமையை மீட்க ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படை ஒரு குழுவை அனுப்பியது. இந்த குழு மீன்பிடி வலையில் சிக்கி இருந்த ஆமையை மீட்டுள்ளது. ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் பாதுகாக்கப்படும் உயிரினங்களில் ஒன்றாரும். இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972ன் அட்டவணை I மற்றும் அழிந்துவரும் காட்டு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னிணைப்பு Iன் படி, ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக பாதுகாக்கப்படுகிறது.