இந்தியா முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2ஆம் கட்ட பொதுத்தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 10ஆம் வகுப்பு தேர்வை 7,407 மையங்களில் 21.16 லட்சம் மாணவர்களும், 12ஆம் வகுப்பு தேர்வை 6,720 மையங்களில் 14.54 லட்சம் மாணவர்களும் என 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பொதுத்தேர்வை எழுதுகின்றனர். மொழி தேர்வுகள் இன்று தொடங்கிய நிலையில், மற்ற முதன்மை பாடங்களுக்கான தேர்வு வரும் 7ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. முன்னதாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வை 2 பிரிவுகளாக பிரித்து நடத்தும் முறை நடப்பு கல்வியாண்டுடன் முடிவுக்கு வரும் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்ட பொதுத்தேர்வு எம்சிக்யூ அடிப்படையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இன்று விரிவான பதிலளிக்கும் வகையிலான 2ஆம் கட்ட பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது