கரை ஒதுங்கிய திமிங்கலத்தை மீட்டு, மீண்டும் கடலில் விடும் காட்சி சமூகவலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் கடற்கரை ஒன்றில் கடல்நீர் உள்வாங்கியதால் ஸ்பெர்ம் வகை திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கிய திமிங்கலத்தை கண்ட மீனவர்கள், அந்தநாட்டு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் விசைப்படகுகள் மூலம் திமிங்கலத்தை மீட்டு மீண்டும் கடலுக்குள்விட முயற்சி செய்துள்ளர். இதனையடுத்து, 20 மணிநேர போராட்டத்திற்கு பின்பு அந்த திமிங்கலம் உயிருடன் பத்திரமாக கடலில் விடப்பட்டுள்ளது. இந்தநிலையில், திமிங்களத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்க முயற்சிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.