திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டையை சேர்ந்தவர் மணிபாரதி. இந்திய துணை ராணுவப்படை வீரரான இவர் காஷ்மீரில் பணிக்கு சென்றுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் இறுது அஞ்சலிக்காக சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆகியோர் இறந்த வீரருக்கு இறுதிக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் துணை ராணுவப்படை சார்பில் டி.ஐ.ஜி. தினகரன், எஸ்.பி சுரேஷ்குமார், தமிழக காவல்துறை சார்பில் ஏ.எஸ்.பி சாய் பிரணித், ஆகியோர் மலர்மலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், பொதுமக்கள் ஏராளமானோரும் இந்த இறுதி அஞ்சலியில் பங்கேற்றனர். இதனையடுத்து 21 குண்டுகள் முழங்க துணை ராணுவப்படையினர் மரியாதை செலுத்தி இறந்த வீரரை நல்லடக்கம் செய்தனர். முன்னதாக விபத்தில் இறந்த மணிபாரதிக்கு காஷ்மீரில் பனிமுடிய இன்னும் மூன்று மாதங்களே உள்ளநிலையில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருப்பது அவரது குடும்பதினரை அழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.