day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

டும்டும்டும் மேளத்திற்கு காத்திருக்கும் நாகசைதன்யா!

டும்டும்டும் மேளத்திற்கு காத்திருக்கும் நாகசைதன்யா!

நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். நடசத்திர தம்பதிகளாய் வலம் வந்த இந்த ஜோடிகள், கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்துப் பிரிந்தனர். சமந்தா தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடிப்பதாகவும், விவாகரத்தான நடிகர் ஒருவருடன் இணைந்திருப்பதாகவும் ஊடகத் தளங்களில் செய்திகள் வெளியாகி, அவர்களுடைய குடும்ப வாழ்க்கைக்கு வேட்டுவைத்தது. இந்த நிலையில் இருவரும் இணைவார்கள் என ரசிகர்களும், அவரது குடும்பத்தினரும் எதிர்பார்த்தனர். இதற்கான தூது சம்பவங்களும் நடைபெற்றன. ஆனால், அதற்கான பயன் எதுவுமில்லை. இந்த நிலையில் இருவரும் தங்களுடைய பயணங்களில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார். அயல்நாடுகளுக்குப் பறக்கத் தொடங்கிய சமந்தா, ஹாட் புகைப்படங்களையும் இணையதளங்களில் இறக்குமதி செய்தார். அதன்மூலம் கிடைத்த புதுப்பட வாய்ப்புகளில் கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றார். அதிலும் ஒரு பாட்டுக்கு மட்டும் அவர் பெற்ற ஒரு கோடி ரூபாய் சம்பளம், திரையுலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நடிகர் நாகசைதன்யா தன் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்த நிலையில், நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய பெற்றோர்கள் நாகசைதன்யாவுக்கு 2வது திருமணம் செய்துவைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு நாகசைதன்யா ஓ.கே. சொன்னதாகவும், ஆனால் நடிகை மட்டும் வேண்டாம் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதனால், விரைவில் சைதன்யா வீட்டில் டும்டும்டும் கேட்கும் என்கிறது திரைக்கூடாரம்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!